எரேமியா 30:10
என் ஊழியன் யாக்கோபே, அஞ்சாதே! இஸ்ரயேலே, கலங்காதே, என்கிறார் ஆண்டவர். தொலைநாட்டினின்று உன்னை நான் மீட்பேன்; அடிமைத்தன நாட்டினின்று உன் வழிமரபினரை விடுவிப்பேன். யாக்கோபு திரும்பிவந்து அமைதியில் இளைப்பாறுவான்; அவனை அச்சுறுத்துவார் எவருமிலர்.